சென்னை – டிச -06,2023
newz – webteam
கடலோர பாதுகாப்பு குழுமம் – நவம்பர் மாதத்திற்கான முக்கிய நடவடிக்கைகள்
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் ஆனது பாதுகாப்பான கடற்கரைகளை பராமரிக்க இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை போன்ற மற்ற சகோதர அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. CSG.CID இன் அதிகாரிகளும், ஆளிநர்களும் கடலோரப் பகுதிகளைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடல் ரோந்து, கடற்கரை ரோந்து, கடலோர சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை செய்தல் மற்றும் கடலோர மக்களுக்கும் பாதுகாப்பான மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் கீழ்கண்ட முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மீட்பு 15.11.2023 அன்று காலை 08 மணியளவில் மெரினா உயிர்காப்புப் பிரிவை சேர்ந்த காவலர்கள், மெரினா கடற்கரையில் பணியில் இருந்தபோது கடலில் தத்தளித்த ஒருவரை மீட்டு அவரது உயிரைக் காப்பாற்றினர். அதேபோல 27.11.2023 அன்று காலை வேளாங்கண்ணி கடற் கரையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த காவலர்கள் பணியில் இருந்த போது மணி (54/23) S/o. கிருஷ்ணன், என்பவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது.
மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு பணி18.11.2023 அன்று திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் திருவிழாவிற்கு
எந்தவித அசம்பாவிதமும் இன்றி கடலோர பாதுகாப்பு குழுமம், திருச்செந்தூர் மரைன் போலீசார்கடல்சார் பாதுகாப்பை வழங்கினர்.காணமல் போனவரை கண்டுபிடித்தல்22112023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் மனோகரா பாம்குரோ ஐஸ்லாந்து அருகே சுமார்60 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் சேதுபாவாசத்திரம் மரைன்
போலீசாரால் மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் நீலகண்டன் (58/23) S/0 கருப்பையா,பேராவூரணி என்பது தெரியவந்தது. அவர் இது தொடர்பாக பேராவூரணி காவல்நிலையத்தில் கானவில்லை
என்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி நபரை பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.கூட்டு ரோந்து.
22112023 மற்றும் 23.11.2023 தேதிகளில் இந்திய கடலோர காவல்படை மற்றும் வனத்துறையுடன் இணைந்து தூத்துக்குடி,மண்டபம், காரைக்கால், சென்னை ஆகிய இடங்களில் கடல்வழி பாதுகாப்புக்காக கூட்டு ரோந்து சென்று வரப்பட்டது,கடந்த வாரத்தில் 25.11.2023 அன்று விழுப்புரம் மாவட்டம், கடலூர் அலகு, புதுக்குப்பம் கடலோர காவல் நிலையத்திற்கு உட்பட்ட தந்திரயாங்குப்பம் மீனவ கிராமத்தில் திமிங்கலத்தின் கழிவான 3.600 கிலோ எடையுள்ள ஆம்பெர்கிரிஸ் என்ற பொருளை 1) தகாளிதாஸ் 57/23, S/0 கிருஷ்ணன். 2) காளி 65 S/O இருசப்பன், தந்திரயாங்குப்பம் ஆகியோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு விழுப்புரம் மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிராம விழிப்புணர்வு குழு கூட்டங்கள்.
நவம்பர் மாதம் 200 கடலோர கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 710 கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
0 Comments