தூத்துக்குடி – ஜீன் -04,2026
Newz – webteam


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நடை ரோந்து
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இ.கா.ப தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் இன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்.ஏ அலுவலகம் சந்திப்பு வரை நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

0 Comments