

கோயம்புத்தூர் – ஜன -27,2025
Newz – Webteam
குடியரசு தின விழாவில் உத்தமர் காந்தி விருது பெற்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய கோவை மாவட்ட எஸ்பி .…
உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம், கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று முதலமைச்சர் அவர்களால் உத்தமர் காந்தியடிகள் காவலர் விருது மாநிலத்தில் மொத்தம் 5 காலர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் தற்போது மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சின்னகாமணன் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக காந்தியடிகள் காவலர் பதக்கத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இ.கா.ப.,இன்று உத்தமர் காந்தியடிகள் காவலர் விருது பெற்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் .சின்னக்காமணன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments