
நாகபடடினம் – செப் -01,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை
பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு பேரணியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு. நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
பெண் குழந்தைகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் அமைந்துள்ள சின்மயா வித்யாலயா சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சுடர் பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள்கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா சிலையிலிருந்து துவங்கி மேலக்கோட்டைவாசல்,பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம், மாவட்ட காவல் அலுவலகம் , வெளிப்பாளையம் வழியாக சென்ற பேரணியில் பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும் பெண் குழந்தைகளை பாதுகாக்க கூடிய சட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பேரணியாக சென்றனர். மேலும் இப்பேரணியானது காடம்பாடி பள்ளியில் நிறைவடைந்தது. சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
0 Comments