மதுரை – மார்ச் -07,2025
Newz – Webteam



மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் காவல்துற
தலைவர், தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை தலைவர் காவல் படைத் தலைவர், தமிழ்நாடு அவர்கள் மார்ச் 6 மற்றும் 7, 2025 ஆகிய இரண்டு நாட்கள், மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், டாக்டர்.லோகநாதன், இ.கா.ப., காவல் ஆணையர், மதுரை மாநகர், பிரேம் ஆனந்த், சின்கா, இ.கா.ப., காவல்துறை தலைவர், தெற்கு மண்டலம், மதுரை, காவல் துணை ஆணையர்கள், மதுரை மாநகர், காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை தலைவர் காவல் உயர் அதிகாரிகளுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை சிறந்த முறையில் பேணவும், சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்கவும், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் அணுகி தீர்த்து வைக்கவும் உரிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
2025 மார்ச் 6ம் நாள், மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்திய ஆய்வு கூட்டத்தில், முக்கிய பிரச்சனைகளான கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ரௌடிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து, உரிய அறிவுரைகளை வழங்கினார். ஆய்வுக்கூட்டத்தில், காவல்துறை இயக்குநர், காவல் உயர் அதிகாரிகளை ரௌடிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அவர்களுடைய சொத்துக்கள் பற்றிய விசாரணையை நடத்தி, அவற்றை முடக்கவும், சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
குற்றத்தடுப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவது மற்றும் காவல் பணியான பீட், ரோந்து, அழைப்பாணை சார்பு செய்தல், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் இதர காவல் பணிகளில் Smart Kavalan App-ஐ சிறப்பான முறையில் உபயோகப்படுத்தி காவல் பணிகளை சிறந்த முறையில் செயல்படுத்த அறிவுறுத்தினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் செய்வோர் மீதான வழக்குகளை விரிவான ஆய்வு செய்து, போக்சோ சட்ட வழக்குகளில் விடுதலை அளித்து தீர்ப்பளிக்கப்பட்ட அனைத்து வழக்குகளை ஆய்வு செய்து, அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல் உயர்
அதிகாரிகளை, காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், மதுரை மாநகர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ரௌடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் உத்திகளை முழுமையாக ஆய்வு செய்தார்.
மதுரை மாநகரில் 28 சரித்திரப் பதிவேட்டு ரௌடிகள், மதுரை மாவட்டத்தில் 30 மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 17 சரித்திரப் பதிவேட்டு ரௌடிகளுக்கு 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது. மேலும், சரித்திரப் பதிவேடு உள்ள ரௌடிகள் மீது உள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணையின்போது உரிய முறையில் வழக்குகளை நடத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய அறிவுரைகள் வழங்கினார். மேலும், மதுரை மாநகரில் 8 சரித்திரப் பதிவேட்டு ரௌடிகள் மீதும், மதுரை மாவட்டத்தில் 6 சரித்திரப் பதிவேட்டு ரௌடிகள் மீதும் அவர்கள் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் மீது உரிய நிதி விசாரணை செய்யப்பட்டு வருகிறது.மதுரை மநகரில் 445 ரௌடிகள் மீது நன்னடத்தை பிணை பெற்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 25 ரௌடிகள் பிணை நிபந்தனையினை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 2 பிணையதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மதுரை மாநகரில் 89 ரௌடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 10 ரௌடிகளுக்கு ஆயுள் தண்டனையும் 18 ரௌடிகளுக்கு கடுங்காவல் தண்டனையும் பெறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், 385 ரௌடிகளிடமிருந்து நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு, அவர்களது நன்னடத்தை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 ரௌடிகள் பிணைய நிபந்தனைகளை மீறியதற்காக, அவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுடைய பிணைய ஜாமீன்தார்ர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், 13 ரௌடிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 15 ரௌடிகளுக்கு ஆயுள் தண்டனையும், மற்றும் 1 ரௌடி மீது கடுங்காவல் தண்டனையும் பெறப்பட்டுள்ளது.
-3-
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு 371 ரௌடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. மேலும், 5 நபர்கள் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவற்றினை இரத்து செய்ய நடவடிக்கையும் அவர்களுக்கு பிணை ஜாமீன் வழங்கிய 7 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 9 ரெளடிகள் மீது குண்டர் தடுப்புர் சட்டத்தின் கீழும், நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் மீதான விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 8 ரௌடிகளுக்கு ஆயுட்கால தண்டனையும், 1 ரௌடிக்கு கடுங்காவல் தண்டனையும் பெறப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறைக்கு தேவைப்படும் உள் கட்டமைப்பு வசதிகள், கட்டிடங்கள், காவல் நிலையங்கள் இயங்கி வரும் கட்டிடங்களில் செய்ய வேண்டிய பராமரிப்பு மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவற்றின் நிலை குறித்தும் மேற்படி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
காவல்துறை இயக்குநர், மதுரை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் “பரவை” திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மேற்படி திட்டத்தின் கீழ் அடையாளம் அடையாளம் காண காணப்பட்ட 18-24 வயதுடைய முதல் முறை தவறு செய்யும் 66 நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 1 நபருக்கு தொழிற்பயிற்சி பள்ளியிலும், 2 நபர்களுக்கு தனியார் நிறுவனத்தில் உரிய வேலையும், 31 நபர்களுக்கு படிப்பதற்கு தேவையான அனுமதியும்,
32 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 7, 2025 அன்று காவல்துறை இயக்குநர் அவர்கள் மதுரை மாநகர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 227 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுரை வழங்கினார்.
மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த
46 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக பாராட்டு சான்றிதழும், வெகுமதியும் வழங்கி அவர்களின் சிறப்பான பணியினை பாராட்டினார்.
0 Comments