கன்னியாகுமரி – ஜீன் -08,2025
Newz – Webteam
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனை சாவடியை திறந்து வைத்த மாவட்ட எஸ்பி ……
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனை சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனை சாவடியை தரம் உயர்த்தி தர மனம் திறந்து நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவில் தரம் உயர்த்தப்பட்ட காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
இன்று புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் IPS திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார் IPS மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் ஆகியோர் உடனிருந்தனர்.



0 Comments