

கடலூர் – மார்ச் -09,2025
Newz – Webteam
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜெயக்குமார் ips கஞ்சா போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவு பேரில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் (பொருப்பு) ராஜா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் . ராஜதாமரை பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் தனிப்படை உதவி ஆய்வாளர் தவசெல்வம், மற்றும் போலீசார் மீனாட்சி பேட்டை பாலம் அருகில் வாகன தணிக்கையில் இருந்தபோது. வந்த ஹீண்டாய் காரை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 10 கிலோ 500 கிராம் கஞ்சா போதை பொருட்கள் இருந்தது.
கஞ்சா பொருட்களை கடத்தி வந்த 1. நவீன் வயது 27 தபெ பழனிசாமி, ஆண்டிதெரு, குறிஞ்சிப்பாடி 2. தீபா சுனா வயது 30 தபெ சுபத்சுனா பர்பந்தா, காலாஹண்டி ஒடிசா மாநிலம். 3. நவின்பத்ரு வயது 27 தபெ ஜில்லாபத்ரு, பர்பந்தா, காலஹண்டி ஒடிசா மாநிலம். 4. அய்யப்பன் வயது 26 தபெ ரவி, ஆண்டி தெரு, குறிஞ்சிப்பாடி ஆகியோர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
. கஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
0 Comments