நாகப்பட்டினம் – அக் -28,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப, உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று உதவி ஆய்வாளர் G.பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை நகர காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 1).கார்த்திகேசன் (25) த/பெ முருகையன், 49, சங்கரன் தோப்பு, விழிதியூர், நாகப்பட்டினம். 2) கருணாகரன் (28) த/பெ கலியபெருமாள், 15, சங்கரன் தோப்பு விழிதியூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து, அவரிடமிருந்து 90ML அளவுள்ள 800 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 180 ML அளவுள்ள 1000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக்குற்றசம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்.
0 Comments