திண்டுக்கல் – ஜன -08,2024
Newz – webteam
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி ரூ.11,25,000/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப. உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த பணம் ரூ.11,25,000/-ஐ மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 Comments