தூத்துக்குடி – ஜீன் -27,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள மொத்தம் 115 காவல்துறையினருக்கு கலந்தாய்வின் மூலம் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கி உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று பொதுமாறுதல் வழங்கினார்.
அதன்படி இன்று தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 115 காவல்துறையினருக்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், கோடிலிங்கம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ், மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் உள்ளிட்ட உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் முன்பு நடைபெற்றது.
இக்குழுவின் மூலம் காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments