சென்னை – பிப் -05,2025
Newz -webteam
கடந்த இரண்டு வருடங்களாக சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில், விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் சையது முகமது ஆகியோர்கள், பொது மக்களை வரவழைத்து, உங்களுக்கு இலவசமாக, 1) கணினி பயிற்சி, 2) தையல் பயிற்சி, 3) ஆங்கில மொழி பயிற்சி, 4) TNPSC Group-I முதல் IV வரையிலான தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், 5) அரசுபள்ளியில் பயிலும் மாணவமாணவிகளுக்கு இலவசமாக டியூசன் கற்றுத் தரப்படும் என்றும், மேலும் கூடைப் பின்னல், பாக்குதட்டு தயாரித்தல், மெழுகுவர்த்தி மற்றும் சாம்பிராணி தயாரித்தல், மற்றும் கைவினைத் தொழில்கள் கற்றுத் தரப்படும் என்றும், மேலும் பயிற்சியின் போது பத்துரூபாயில் மதிய உணவு வழங்கப்படும்
என்று விளம்பரம் செய்து, பொதுமக்களை கூட்டி, சுமார் ஒரு மாதம் பயிற்சி அளித்து பயிற்சியின் போது பத்துரூபாயில் இலவச சாப்பாடு மற்றும் இடையிலே தேனீர், தின்பண்டங்கள் கொடுத்துள்ளனர். இதனால் மகிழ்சியடைந்த பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகமாக கூட ஆரம்பித்துள்ளனர். மேலும் தாங்கள் தொடங்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக அதிக பணம் கிடைக்கும் என்றும், வாழ்க்கைதரம் உயரும், அப்பொழுது தங்களை போல் நிறுவனம் ஆரம்பித்து, எழை எளிய மக்களுக்கு உதவலாம் என்று சட்டத்தால் வரைமுறைப்படுத்தாத பல திட்டங்களான 1. Grocery Scheme என்ற பெயரில் ரூ. 1,000/-ஐ முதலீடு செய்தால், சுமார் ஒன்றறை மாதத்திற்குள் ரூ.2,000/-க்கான வீட்டுமளிகைசாமான்களும், 2. Pension Scheme என்ற பெயரில் ரூ. 1,00,000/-ஐ செலுத்தினால் 7 மாதத்திற்கு மாதம் ரூ. 30,000/- வீதம் மொத்தம் ரூ. 2,10,000/- மும், தருவதாகவும், 3. Housing Plot Scheme மூலம் மாதம் ரூ. 10,000/- வீதம் 12 மாதத்திற்கு ரூ. 1,20,000/-த்தை முதலீடாக செலுத்தினால் 750 சதுர அடிகள், காலிமனை கொடுப்பதாகவும், 4. Gold Jewel Scheme கீழ் மாதம் ரூ.1500 வீதம் 12 மாதத்திற்கு, 18,000 கட்டினால் 5 கிராம் தங்க நகை வழங்குவதாகவும் மற்றும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆதை நம்பிய பொதுமக்கள் அவர்களின் வசதிக்கேற்ப பணத்தை கடந்த இரண்டு வருடமாக முதலீடு செய்துவந்துள்ளனர். இறுதியாக கடந்த 23.01.2025ம் தேதி பொதுமக்களிடம் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதம் ரூ.30,000/- வீதம் ஒன்பது மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த சிறப்பு திட்டம் இன்றே கடைசி என்றும், விளம்பரம் செய்து பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வது தெரிந்து. 23.01.2025 அன்று கிடைக்கப் பெற்ற ஊர்ஜிதமான தகவலின் அடிப்படையில் சேலம் பொருளாதார 01/2025 : U/s 316, 318 r/w 62 BNS 2023 & Sec 3, 5, 21)1(, 23 of the Banning of Unregulated Deposit Schemes Act, 2019 5 5 செய்யப்பட்டு, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் தலைமையில் புனித அன்னை தெரசா மனித நேய
அறக்கட்டளை இயங்கி வந்த சிவகாமி திருமணமண்டபத்திற்கு சென்று, சிறப்பு திட்டம் மற்றும் பிறதிட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளது கண்டுபிக்கப்பட்டு பின் மேற்படி விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் சையத் மஹமூத் ஆகியோர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூ.12,68,42,850/-ம், (பன்னிரண்டு கோடியே அறுபத்து எட்டு லட்சத்து நற்பத்து இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது ரூபாய்) மற்றும் சுமார் 3 கிலோ கிராம் எடையுள்ள தங்கநகையும்,சுமார் 13 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தும். குற்றவாளிகளையும். அவர்களிடமிருந்து கைப்பற்றிய மேற்படி பொருட்களையும். கோவை TNPID கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வழக்கில் எதிரிகள் பயன்படுத்தி வந்த நான்கு சக்கரவாகனங்கள் மூன்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் விஜயபானு மீது ஏற்கனவே கீழ்கண்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. 1) ஆவடி மாவட்டம், பூந்தமல்லி காவல் நிலைய குற்ற எண்: 539/2009, ச/பி 380 இ.த.ச
2) ஆவடி மாவட்டம், பூந்தமல்லி காவல் நிலைய குற்ற எண்: 541/2009, ச/பி 380 இ.த.ச 3) சென்னை மாநகர குற்றப்பிரிவு 1 குற்ற எண்: 231/2012,ச/பி419, 420, 465, 467, 468, 471.5.@ 170, 34, 419, 420, 465, 467, 468, 4719.5., 380
4) சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்றஎண்: 192/2012, ச/பி406, 419, 420 இ.த.ச @ 170, 406, 419, 420.5.
5) சென்னை தி.நகர், வடபழனி காவல் நிலைய குற்ற எண்: 509/2009, ச/பி380 இ.த.ச
6) வேலூர் மாவட்டம், மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண்: 38/2012,ச/பி419, 420 இ.த.ச @ 34, 419, 4209.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500/-(நான்கு கோடியே முப்பத்து ஒரு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து ஐந்நூறு ரூபாய்) இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த பொதுமக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்குமாறு தெரியப்படுத்தப்படுகிறது.
0 Comments