திருச்சி -மே,24,2024
Newz – webteam
தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த 13.05.24-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு
பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த
பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,
விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பனிக்கத்தெருவை சேர்ந்த வேல் முருகன் (எ) முருகன் வயது 51, த.பெ.சந்திரசேகரன். என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிரி வேல் முருகன் (எ) முருகன் என்பவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்ததாக 13 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே எதிரி வேல் முருகன் (எ) முருகன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி, இ.கா.ப., மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுதத்தை காண்பித்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ளில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments