திருப்பத்தூர் – ஜீலை -02,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் இன்று முனைவர் எம்.எஸ். முத்துசாமி இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர் வேலூர் சரகம் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., பரிந்துரையின் பெயரில் சிறப்பாக செயல்பட்டு நாட்றம்பள்ளி காவல் நிலைய குற்ற எண்: 300/2023 வழக்கில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் எடை கொண்ட குட்கா & பான் மசாலா பொருட்களை கண்டறிந்து கைப்பற்றியமைக்காக 1. நாகராஜன், காவல் ஆய்வாளர், 2. ரவி, சிறப்பு உதவி ஆய்வாளர், 3.ஜெயச்சந்திரன், தலைமை காவலர், மற்றும் 4. வெங்கடேசன், முதல் நிலை காவலர் ஆகியோர் தம் செய்த சிறப்பான செயலை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் நகர காவல் நிலைய குற்ற எண்: 223/2023, வழிப்பறி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை CCTV காட்சி பதிவுகளைக் கொண்டு சிறப்பாக புலன் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு எதிரிகளையும் கைது செய்து களவு போன பொருட்களை மீட்ட 1. ஹேமாவதி, காவல் ஆய்வாளர், 2. அஜித், உதவி ஆய்வாளர், 3.கிருபாகரன், தலைமை காவலர், 4.முனிவேல், முதல் நிலைக் காவலர், 5. சந்திரசேகர், முதல் நிலை காவலர், 6.பிரபாகரன், முதல் நிலை காவலர் மற்றும் 7.விஜயரங்கன், காவலர் ஆகியோரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
0 Comments