தூத்துக்குடி – டிச -12,2023
Newz – webteam
காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது – 529 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும்பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் வேம்பார் கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் தாமரை செல்வி
ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்ததில் அதில் 12 மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் அந்த காரில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீரனூர் பகுதியைச் சேர்ந்த சேதுபாண்டி மகன் தர்மேந்திரன் (36) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கணேஷ் மகன் சிவப்பிரகாஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 529 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்து, 529 கிலோ கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 125 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா உட்பட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 30 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
0 Comments