திண்டுக்கல் – அக் -17,2023
newz – webteam
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த திண்டுக்கல் முருகபாவனம் பகுதியைச் சேர்ந்த சகாய ஆரோக்கியராஜ் (29) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா , நீதிமன்ற தலைமைக் காவலர் அபிராமி மற்றும் அரசு வழக்கறஞரி.
ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சகாய ஆரோக்கியராஜ் என்பவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
ads
0 Comments