சென்னை – ஆகஸ்ட் -04,2023
newz – webteam
தமிழகத்தில் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி டி ஐ ஜி என முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிராச் கிஷோர் ரவி பணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பொருளாதார குற்றப்பிரிவின் ஏடிஜிபியாக பால நாகதேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னையின் போக்குவரத்து மற்றும் தலைமையிடம் கூடுதல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்
திருச்சி மற்றும் மதுரை, திருநெல்வேலி கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தின் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக மூன்று டிஜிபிகள் மூன்று ஏடிஜிபிக்கள் 13 ஐஜி கள் மற்றும் 8 டிஐஜி கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக சர்ச்சைக்குரிய பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிகே ரவி டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வன்னிய பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டு சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குனராக சந்தோஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் ஐ எஃப் எஸ் ஹிஜாவு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த
வழக்குகளை கையாண்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவின் ஏடிஜிபி மற்றும் ஐஜி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவின் ஏடிஜிபியாக பாலநாகதேவியும் மற்றும் ஐஜியாக சத்திய பிரியா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் சென்னையில் கூடுதல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த அடிப்படையில் கொடநாடு வழக்குகளை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி மேற்கு மண்டல ஐஜியாக இருந்த சுதாகர் சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னையில் போக்குவரத்து இணை ஆணையராக சுதாகர் ஐபிஎஸ் பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த கபில்குமார் சரத்கர் சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமையக கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
பல கஞ்சா கடத்தல் வழக்குகளை கையாண்டு கஞ்சா கடத்துபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தெற்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னையில் மிகவும் பிரபலமாக பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்டு பாராட்டு பெற்ற இணை ஆணையர் ரம்யா பாரதி மதுரை டி.ஐ.ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக சாமுண்டீஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னையின் போக்குவரத்து பணிக்காக காலியாக இருந்த வடக்கு இணை ஆணையர் பதவிக்கு அபிஷேக் தீக்ஷித் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மதுரை காவல் ஆணையராக லோகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி கமிஷனராக காமினி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி கமிஷனர் இருந்த ராஜேந்திரன் நுண்ணறிவு பிரிவு சிஐடியின் டி ஐ ஜி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் மேற்கு மண்டல ஐஜி பொறுப்பிற்கு பவானிஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தென் மண்டல ஐஜியாக நரேந்திர நாயர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 Comments