நாகபட்டினம் – நவ -18,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் நடத்திய கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 1010 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப., உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 18.11.2023 உதவி ஆய்வாளர் G.பாலமுருகன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட பாண்டித்துரை (28) த/பெ லட்சுமணன், சுனாமி குடியிருப்பு செல்லுார் நாகப்பட்டினம். என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 90ML அளவுள்ள 570 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 180 ML அளவுள்ள 140 பாண்டி சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தும கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்.அதே போல நேற்று தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து
நிலையம் அருகில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 1)மகேஷ்வரி (40) க/பெ.சிவன்காளை, நாகநாதர் கோவில், மேல வீதி வெளிப்பாளையம், நாகப்பட்டினம், 2) திவ்யா க/பெ விஜயகுமார், பாப்பா கோவில், நாகப்பட்டினம்,
என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 90ML அளவுள்ள 300 பாண்டி மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்டது.
0 Comments