கோயம்புத்தூர் – அக் -16,2023
newz – webteam
கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது… 10 இருசக்கர வாகனங்கள் மீட்பு… கோவை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை…
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், கருமத்தம்பட்டி காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி வந்த நிலையில் கருமத்தம்பட்டி சேர்ந்த விஜய் (30) சோமனூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் (22) மற்றும் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (27) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கருமத்தம்பட்டி மற்றும் பொள்ளாச்சி பகுதியில் திருடு போன 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மேற்படி மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
ads
0 Comments