ஆவடி – பிப் -03,2024
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் அம்பத்தூர் கள்ளிகுப்பம் முனுசாமி மகன் ஜெயபால், என்பவர் கொடுத்த புகார் மனுவில் 1950ம் ஆண்டு எண்-15, பெருமாள் கோயில் தெரு, கள்ளிகுப்பம், அம்பத்தூர், சென்னை-53 விலாசத்தில் உள்ள இடத்தை வாதியின் தகப்பனார் முனுசாமி கிரையம் பெற்று வீடு கட்டி வசித்து வந்து அவரது காலத்திற்கு பிறகு அவரின் மகன்களாகிய ஜெயபால் உட்பட நாராயணசாமி, சுந்தரம், ஜெயராமன் ஆகிய நான்கு பேர் வாரிசுதாரர்கள் என்றும் சகோரர்கள் சில பேர் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்
இந்நிலையில் ஜெயபால் மட்டும் மேற்படி வீட்டில் வசித்து வந்துள்ளார். மேற்படி வீட்டின் சொத்து பத்திரங்களை வாரிசுகளில் ஒருவராக சுந்தரம் என்பவரிடம் இருந்துள்ளது. இந்நிலையில் சுந்தரம் மேற்படி சொத்துக்கு தான் ஒருவர் மட்டுமே வாரிசுதாரர் என கூறி போலி வாரிசு சான்றை தயார் செய்து மவுண்ட்ரோடு கிளை, சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொல்லாட்ரல் செக்யூரிடியாக காட்டி தான் நடத்தி வரும் ஹைடெக் என்டர்பிரைசஸ் கம்பெனி பெயரில் ரூ.16,00,000/- கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் வங்கி தரப்பில் ஜப்தி நடவடிக்கை எடுத்தபோதுதான் வாதிக்கு விவரம் தெரியவந்துள்ளது. மேற்படி ஹைடெக் என்டர்பிரைசஸ் கம்பெனியில் பங்குதாரர்களாக இருக்கும் சுந்தரத்தின் மகன் கோபு மற்ற நபர்களான பாலாஜி, நேசராஜ் சதீஷ்குமார் ஆகியவர்களும் இந்த குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளார்கள்.
இதர வாரிசுதாரர்கள் இருப்பதை மறைத்து தான் ஒருவனே வாரிசு என்று காட்டி குடும்ப சொத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்தது குறித்து ஜெயபால் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்காகும்.மேற்படி வழக்கானது கடந்த 18 ஆண்டுகளாக பூந்தமல்லி ஜேஎம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 27.06.2023 தேதி இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சுந்தரம் இறந்துவிட்டபடியால்
பாலாஜி, நேசராஜ் சதீஷ்குமார் இரண்டு பேருக்கும் ஆறு மாத கால
சிறைதண்டனையும் ரூ.5000/-ம் அபராதம் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
குற்றவாளியான கோபு என்பவர் தலைமறைவாக இருந்து வந்ததால் வழக்கைதனியாக பிரித்து விசாரணையில் இருந்து வந்தது, கோபு
என்பவரை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று
இன்று குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் எண்.I தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி கோபு என்பவருக்கு மூன்று
ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து
தீர்ப்பு வழங்கினார்.
ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர், இ.கா.ப., உத்தரவுப்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டணைபெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்சரத்பாபு மற்றும் மத்திய குற்றப்பிரிவு நில பிரச்சனை தீர்வு அணி
காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் அவர்களது குழுவினரைஆவடி காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்
0 Comments