கன்னியாகுமரி – ஜன -09,2024
Newz – webteam
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார்மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS., உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் செல் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் நடவடிக்கையாக தற்போது சுமார் 60,00,000/- அறுபது இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 303 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் செல் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார் மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
பொதுமக்கள் தெரியாத நபரிடமிருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் அது குற்றசம்பவத்தில் சம்மந்தப்பட்டதாகவோ அல்லது திருட்டு செல்போனாக இருக்கலாம்.
பொதுமக்கள் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது திருடபட்டாலோ அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் இல்லையெனில் Tamilnadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். அவ்வாறு புகார் அளிக்கும் போது தவறவிட்ட செலபோனின் இரண்டு IMEIஎண்களையும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.தவறவிட்ட செல்போனின் IMEI எண்கள் தெரியவில்லை என்றால் அந்த செல்போனில் இறுதியாக பயன்படுத்திய செல்போள் எண்ணை மனுவில் குறிப்பிட வேண்டும்கடை வைத்திருபவர்கள், பயன்படுத்திய செல்போன் வாங்கும் போது, விற்பவரின் அடையாள அட்டை, செல்போன் நம்பர், ஓர்ஜிலை பில் வாங்குவதோடு அதனை சரிபார்க்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தவறுதலாக கிடைத்த செல்போனை தாங்கள் உபயோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.
அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
0 Comments