சென்னை – அக் -19,2023
newz – webteam
தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவதும், தேவையைக் குறைக்கவும் தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.நேற்று ஈரோடு மாவட்டம், சோலர், பாலூசாமி நகரில் உள்ள இராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கஞ்சா போதைப் பொருள் இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு. சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குழுவினர் ஈரோடு மாவட்டம், சோலர், பாலூசாமி நகரில் உள்ள இராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்ததில் 50,500 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய ஈரோடு மாவட்டத்தை சார்ந்த கௌதம்.தமிழ்செல்வன் வ/34 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்தனர்.
அமலாக்கதுறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,டிஐஜி ராதிகா. இகா.ப. மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி தலைமையில் நடத்தப்பட்ட இச்சோதனையில் ரூபாய், 7,50,000/ மதிப்புள்ள 50.500 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யபட்டது.
மேற்படி கஞ்சா போதைப் பொருளை பறிமுதலில் ஈடுப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப பாராட்டியுள்ளார்
0 Comments