மதுரை -டிச -30,2024
Newz – Webteam



மதுரை மாநகர காவல் நிலையங்களால் கைப்பற்றப்பட்ட615.3 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது
மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 126 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 6153 கி. கிராம் கஞ்சாவை போதைப்பொருட்கள் ஒழிப்புக்குழுவின் ( DRUG DISPOSAL COMMITTEE) தலைவரான மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன்.PS மற்றும் உறுப்பினர்களான மதுரை மாநகர் தெற்கு மாவட்ட துணை ஆணையர் கராட் கருண் உத்தவ்ராவ்IPS, தடய அறிவியில் ஆய்வக உதவி இயக்குநர் .வித்தியாராணி மதுரை மாநகர் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் உதயகுமார்.
மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சேதுமணி மாதவன்.ஆகியோர்களின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களின் அறிக்கையுடன் அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி பெறப்பட்ட நீதிமன்ற ஆணையுடன் இன்று 30 122024-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ASEPTIC SYSTEMS தொழிற்சாலையில் அழிக்கப்பட்டது
0 Comments