சென்னை ஆவடி – மே -09,2023
newz – webteam
ஞாயிறு அன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் தேர்வு எழுதவந்த ஆனந்தி வ/18,
த/பெப. விநாயகம், நடுத்தெரு,
B.R. பள்ளி, திருத்தணி, திருவள்ளூர்
மாவட்டத்தை சேர்ந்த மாணவி வழி தவறி ஜெயகோபால் கரோடியா பள்ளி, ஆவடி
என்ற தேர்வு மையம் சென்றதால் உள்தே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால்
தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்று அழுதபடி நின்று கொண்டிருந்த
மாணவி ஆனந்தி மற்றும் அவரின் பெற்றோர்கள் இருவரையும் அங்கு பணியில் இருந்த
ஆவடி போக்குவரத்து காவலர்கள்
தனசேகரன் மற்றும்
தினேஷ் குமாரசாமி இருவரும் மாணவி ஆனந்தி மற்றும் அவரின் பெற்றோர்கள்
இருவரையும் ஆவடி டிராபிக் பேட்ரோல் வாகனத்தில் ஏற்றி சென்று விவேகானந்தா வித்யாலயாபள்ளி, திருமுல்லைவாயில் தேர்வு மையத்திற்கு உரிய நேத்திற்கு அழைத்து சென்று மாணவிதேர்வு எழுதுவதற்குஉதவி செய்தனர். மாணவி மற்றும் அவரின்பெற்றோர்கள்போக்குவத்து காவலர்களின் தக்க சமயத்தில் செய்த உதவிக்கு கண்ணீர்
மல்க நன்றிதெரிவித்துக்கொண்டனர்.
போக்குவத்து காவலர்களின் மெச்சதகுந்த
பணியினை பாராட்டி.சந்திப் ராய் ரத்தோர் இ.கா.ப., காவல் ஆணையாளயார் காவலர்களை நேரில் அழைத்து
வெகுமதி மற்றும் பாராட்டுசான்றிதழ் கொடுத்து சிறப்பித்தார்
0 Comments