விழுப்புரம் – மே -12,2023
newz – webteam
போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தார். கல்லூரி முதல்வர் தமிழரசி மற்றும் பேராசிரியர்கள், காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழாவில் பங்கேற்று உரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.
போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போத பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதை பழக்கத்திற்குள்ளனவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.
என 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
0 Comments