சென்னை – மே -12,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை, தலைமையகம்
2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1இலட்ம் வெகுமதி வழங்கி டி.ஜி.பி பாராட்டு.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் விதமாக கஞ்சா வேட்டை என்ற அதிரடி நடவடிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 நடந்து முடிந்தன. மீண்டும் கஞ்சா விற்பனை தலை தூங்கவிடாமல் தடுக்க கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் 01.05.2023 முதல் நடை பெற்று வருகிறது.
கடந்த 09.05.2023 அன்று மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகனத்ன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவில் இருந்து போலியான பதிவு எண் கொண்ட, சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், வேலவர் புதுக்குளம் என்ற கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்து சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது சாக்கு மூட்டையில் ரூ. 2 கோடி மதிப்புடைய 2090 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்யப்பட்டனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்து காவலர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். செ. சைலேந்திரபாபு, இ.கா. பா, அவர்கள் இன்று 12. 05. 23 டி.ஜி.பி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதியும், நற்சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கி, பாராட்டினார்
கடந்த 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 36 பெண்கள் உட்பட 1337 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 42 பேர் வெளி மாநிலங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதுவரை 3408 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 164 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதோடு கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 08 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 காவலர்கள் பணியிடை நீக்கம் (suspension) செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments