திருப்பத்தூர் – மே -19,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபின் புதிதாக கட்டி முடிக்கபட்டுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று 19.05.2023 காலை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மேற்படி புதிதாக திறந்து வைக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்,BVSc., குத்து விளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்வில் வேலூர் சரக காவல் துணை தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி IPS, மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன்.,IAS, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் காவல்துறையினர் கலந்துக் கொண்டனர்.
0 Comments