திருப்பத்தூர் – ஜீன் -01,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு ரோந்து பணியின் போது துரிதமாக செயல்பட்டு இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூபாய் 15000/- மதிப்புள்ள 237 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடத்தி வந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பான செயல் செய்த உதவி ஆய்வாளர் . ராஜ்குமார், முதல் நிலை காவலர்கள் பாக்யானந்தம்,.கோபி சுரேந்தர், சக்திவேல் காவலர் லியாகத்கான் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி, மேலும் பணியை சிறப்பாக செய்ய அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.
0 Comments