நெல்லை – ஜீன் -03,2023
newz – webteam
திருநெல்வேலி ஜங்ஷன் சிந்து துறையை சார்ந்த வழக்கறிஞர் சிவசங்கரி என்பவர் 11 .3 .2020 அன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் வெள்ளி மோதிரமும் குழந்தைக்குரிய வெள்ளி கம்மலும் ரூபாய் 577/- கொடுத்து வாங்கியுள்ளார்.
அன்றைய தேதியில் வெள்ளியின் விலை ஒரு கிராம் க்கு ரூயாய் 49.35 பைசாவாக இருந்துள்ளது
சிவசங்கரிக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி மோதிரமும் வெள்ளி கம்மல் எடை 5.33 கிராம் இருந்துள்ளது.
அடிப்படையில் ரூபாய் 263/- மட்டுமே வசூல் செய்திருக்க வேண்டும் கூடுதலாக ₹314/- வசூல் செய்தது
சரவணா செல்வரத்தினம் வெள்ளி மோதிரத்தையும் வெள்ளி கம்மல் எண்ணிக்கையின்
(பீஸ் ரேட்) அடிப்படையில் விற்பனை செய்ததாக தெரிவித்தார்கள் இது முறையற்ற வாணிபம் என சிவசங்கரி வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் இதனை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாட்ஸ் டோன் பிளஸ்ட் தாகூர் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 10,000 /-வழக்கு செலவு ரூபாய் 5000 /-சேர்த்து மொத்தம் ரூபாய் 15,000/- கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 Comments