வேலூர் – ஜீன் -07,2023
newz – webteam
தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் டிஐஜியாக முத்துசாமி பதவியேற்ற பின்பு அங்கு காவல் துறையில் பல நவீன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வேலூரில் ரூ. 5.7 கோடி செலவில் Police Command Control and Response Centre உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேலூர் சரகத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் முக்கிய எல்லைப்பகுதிகள், அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பதட்டம் நிறைந்த பகுதிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும். ஒரே சமயத்தில் 1,200 சிசிடிவி கேமராக்களை இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மானிட்டர் செய்ய முடியும். இதன் மூலம் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி மற்றும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த அமைப்பு வேலூர் முன்னாள் எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று டிஜிபி சைலேந்திரபாபு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது வேலூர் டிஐஜி முத்துசாமி, எஸ்பி மணிவண்ணன் மற்றும் ஆய்வாளர்கள், காவலர்கள் இருந்தனர். தமிழக காவல்துறையில் முதன்முறையாக இந்த வசதி துவங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments