தூத்துக்குடி – ஜீன் -17,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள குற்றவியல் வழக்குகளை நீதிமன்ற வழக்கு விசாரணை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (Trial Monitoring officers) சாட்சிகளை விரைந்து ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளை, நீதிமன்ற வழக்கு விசாரணை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (Trial Monitoring officers) சாட்சிகளை விரைந்து ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் அறிவுரைக் கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்டத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளை காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழக்குகளை கண்காணித்து, சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜர்படுத்துதல் மற்றும் நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் . ரேனியஸ் ஜேசுபாதம் உட்பட தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
0 Comments