தூத்துக்குடி – ஜீன் -23,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழ்நாடு அரசு வழங்கிய ரூபாய். 8 லட்சம் மதிப்பிலான உடம்பில் அணியும் (Body Worn Camera) 72 கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன்பாட்டுக்கென தமிழ்நாடு அரசு ரூபாய். 7,65,432/- மதிப்புள்ள 72 உடம்பில் அணியும் புதிய நவீன ரக கேமராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை (Body Worn Camera and Storage Device) வழங்கியுள்ளது. இந்த கேமராக்களை காவல்துறையினர், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் வசதி உள்ளது.
இதை காவல்துறையினர் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்படி இந்த கேமராக்களை தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு 15 கேமராக்களும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 6 கேமராக்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு 10 கேமராக்களும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு 8 கேமராக்களும், மணியாச்சி உட்கோட்டத்திற்கு 7 கேமராக்களும், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு 11 கேமராக்களும், விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு 11 கேமராக்களும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு 4 கேமராக்களும் என மொத்தம் 72 கேமராக்களை இன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் வைத்து காவல்துறையினருக்கு வழங்கி, இதன் செயல்பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வளார் லதா, உதவி ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், சங்கர் கணேஷ், காவல்துறை பண்டக பிரிவு அலுவலக கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments