கன்னியாகுமரி – ஜீலை -18,2023
newz – webteam
கன்னியாகுமரியில் பணியாற்றிய தன் பணிக்காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய காவல் துணை கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி உட்கோட்டத்தில் காவல்துணை கண்காணிப்பாளராக ராஜா கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
பணி மாறுதல் செல்லும் காவல்துணை கண்காணிப்பாளர் அவர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் I.P.S நேரில் வரவழைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டும் , visible policing உறுதிப்படுத்தியதற்காகவும் சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கி பாராட்டினார்
0 Comments