கோயம்புத்தூர் – ஜீலை -28,2023
newz – webteam
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.O என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக “காவல்துறையினருடன் ஒரு நாள்” நிகழ்வு… பங்கேற்ற பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி…
கோவை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., தொடங்கிய ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.O” என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறையினர் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர். மேலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0-ல் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தாங்களே சில பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலை பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதன் தொடக்கமாக கோவில்பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த எஸ். எஸ். குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 30 மாணவிகளுக்கு திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டும், அம்மாணவிகளுக்கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் “காவல்துறையினருடன் ஒரு நாள்” (A DAY WITH POLICE) என்ற நிகழ்ச்சி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் PRS வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள காவல் துறையில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் தெரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவை Rifle Club-ஐ பார்வையிட்டனர். அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்க்கு இடையிலான வித்தியாசம் பற்றி மாணவியர்க்கு உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். மாணவிகள் ஆர்வத்துடன் துப்பாக்கிகளை எடுத்து குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவியர்களுக்கு இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் காவல்துறையினர் நண்பர்கள் போல் பழகுகிறார்கள் என கூறினார்கள். மாணவியர்க்கு போலீசாரின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மனதளவிலும், உடலளவிலும் வலுப்படுத்தி பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நிகழ்ச்சி நிறைவாக நினைவு பரிசாக அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடந்து நடத்துவதற்கு கோவை மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
0 Comments