கன்னியாகுமரி – ஜீலை -29,2023
newz – webteam
பத்திரம் தொலைந்ததை வழக்கு பதிவு செய்ய 50 000 கேட்ட எஸ்ஐ சஸ்பெண்ட்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., சுந்தர்ராஜ். இவரது எல்கைக்கு உட்பட்ட பகுதியில் பணக்குடியை சேர்ந்த ஒருவரது சொத்து பத்திரம் தொலைந்து தொடர்பான வழக்குப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதுபற்றி விசாரணை நடத்திய எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத், எஸ்.ஐ., சுந்தர்ராஜை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கைதி ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்ற சுந்தர்ராஜ் , அவரை கைதிகளுக்கான அறையில் அடைக்காமல் தனது அறையில் கட்டிலில் கை விலங்குடன் கட்டிப்போட்டு விட்டு தூங்கும் படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது…
0 Comments