வேலூர் – ஆகஸ்ட் -01,2023
newz – webteam
சாலை விபத்துக்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்தித்து, சாலை விபத்துகளின் பின்விளைவுகளை விழிப்புணர்வு பயிற்சி வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியின் Physical Medicine and Rehabilitation துறை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
நான்கு கட்டமாக நடைபெற உள்ள இப்பயிற்சியின் தெடக்க விழா இன்று பாகாயம் புனர்வாழ்வு மையத்தில் (Physical Medicine and Rehabilitation center) நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பயிற்சியினை, காவல்துறை துணைத் தலைவர்
முனைவர் .
முத்துசாமி, இ.கா.ப., துவக்கிவைத்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்னள், IPS, முன்னிலை வகித்தார்.
CMC வேலூர் PME துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஐக்கப் ஜார்ஜ், PMR துறை பேராசிரியர் ஜீடி ஆன் ஜான், மற்றும் பயிற்சியாளர் DE குரு நாகராஜன் MSW Ph.D, (WHO Certified Trainer) ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சி வகுப்பில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உரையாடியநிகழ்வு. போக்குவரத்து காவலர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
0 Comments