திருச்சி – ஆகஸ்ட் – 18,2023
newz – webteam
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இளைஞர்களின் நலனை காக்க “போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்”
திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, இ.கா.ப.,திருச்சி மாநகரத்தில் பொருப்பேற்றபிறகு, போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்க காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்
போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வருகின்ற 11.08.23-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமலாக்கப்பிரிவு சார்பில் வருகின்ற 11.08.2023 தேதி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அரசு துறையும் ஒருங்கிணைந்து மாபெரும் போதை பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சினை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முன்னெடுப்பாக, திருச்சி மாநகரில் போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கையெழுத்து இயக்கப் பிரச்சாரம் நடத்திட காவல் ஆணையர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகரத்தில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திமார்க்கெட் ஆர்ச் மற்றும் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறத்தெரு சந்திப்பு ஆகிய 4 இடங்களில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே “போதைபொருள்களின் தீமைகள் குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயரிய நோக்கோடு, “போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்” நடத்தப்பட்டது. மேற்கண்ட கையெழுத்து இயக்கப் பிரச்சார நிகழ்ச்சியை கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் .N.காமினி, இ.கா.ப., கையெழுத்திட்டு, இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மேலும் கோட்டை, காந்திமார்க்கெட், உறையூர் ஆகிய இடங்களில் காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக காவல் உதவி ஆணையர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கையெழுத்து இடும் வகையில் பெரிய அளவில் பலகை (Board) வைக்கப்பட்டு, போதை பொருள்களின் தீமைகள் மற்றும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியகளுக்கு விளக்கி கூறி கையெழுத்து பெறப்பட்டது. மேலும் போதை பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்.96262-73399 மூலமும், காவல்துறை அவசர உதவி எண். 100-க்கும் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்கள்.
திருச்சி மாநகரில் இதுபோன்று “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்” தொடர்ந்து நடைபெறும் எனவும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது தொடர்ந்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரித்தார்
0 Comments