திருச்சி – ஆகஸ்ட் -20,2023
newz – webteam
திருச்சி மாநகர காவல் ஆணையர் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் பார்வையிட்டும், காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு அறிவுரைகள்
வழங்கியும், திருச்சி மாநகரத்தில் ரோந்து வாகனங்களை பார்வையிட்டு, ரோந்து
காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்
திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டும், தமிழக அரசால் வழங்கப்பட்ட எளிதில் எடுத்துச்செல்லும் வகையிலான Portable X-Ray Baggage Scanning Machine பயன்பாட்டினை ஆய்வு செய்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். பின்னர் திருச்சி மாநகர காவல்நிலையங்களில் உள்ள வரவேற்பாளர்களுடன் கலந்துரையாடி பேசுகையில், எந்த புகார் வந்தாலும் உடனடியாக கணிப்பொறியில் பதிவு செய்தும், புகார்தாரர்களிடம் நல்லமுறையில் கனிவுடன் அவர்களது குறைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கள் கொடுத்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டதா என மனுதாரரை விசாரித்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் மநாகரத்தில் பயன்பாட்டில் உள்ள ரோந்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவல் ரோந்து இருசக்கர வாகனங்களை பார்வையிட்டும், 100-க்கு அழைப்பு வந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றும் புகார்தாரர்களிடம் கனிவுடன் அவர்களது குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் திருச்சி மாநகர ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து பயிற்சியினை மேற்பார்வையிட்டும், திருச்சி மாநகரத்தில் பயன்படுத்தப்படும் காவல் வாகனங்களை ஆய்வு செய்தும், ரோந்து பணிபுரியும் அலுவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், வாகனத்தில் உள்ள குறைகள் பற்றி கேட்டறிந்தார்கள். மேலும் காவல்நிலையத்தில் உள்ள ரோந்து காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என்றும், ரோந்து காவலர்கள் நகர்ந்து கொண்டே இருந்தால்தான் குற்றங்கள் குறைந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும், ரோந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்கள். இக்கவாத்து பயிற்சியில் கூடுதல் காவல் ஆணையர் மாநகர ஆயுதப்படை, காவல்
அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments