திருப்பத்தூர் – ஆகஸ்ட் -22,2023
newz – webteam
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” கொண்டுவரப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., இன்று 22.08.2023 ISLAMIAH WOMENS COLLEGE வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் மற்றும் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
0 Comments