திருநெல்வேலி – செப் -10,2023
newz – webteam
விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்.
19.09.2022 -ம் தேதி அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், காவல் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை இருக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும் எனவும், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்திலான ஷெட் அமைத்திருக்க வேண்டும் எனவும், சிலைகள் அமைந்துள்ள இடத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சிலையை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், ஊர்வலத்தின் போது பொது அமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் , சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுபகுமார் மற்றும் விநாயகர் சிலை வைக்கும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments