சென்னை – செப் -13,2023
newz – webteam
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” (VEERA Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனம் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒத்திகை நிகழ்வு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
இதனை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது
வீரா வாகனத்தின் பயன்பாடு குறித்து விரிவாக பார்த்துள்ளோம். விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்பதற்கும், வாகனங்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்கவும் இந்த வீரா வாகனம் உதவுகிறது.
சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும்? எவ்வளவு Speed limit என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பான ஆலோசனை விரிவாக நடந்து வருகிறது. ஒரு கமிட்டி அமைத்து அதனுடைய பரிந்துரை வந்துள்ளது. சென்னையில் வாகனங்கள் எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
சென்னையில் உள்ள சிக்னல்கள் பழுதானால் உடனே பழுது நீக்கம் செய்யப்படுகிறது. சிக்னல் இருக்கும் பகுதிகள் சிலவற்றை மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னையில் மொத்தமாக 277 சிக்னல்கள் இருக்கிறது”
இவ்வாறு சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.
0 Comments