திருச்சி – செப் -12,2023
newz – webteam
திருச்சி மாவட்டம் காவல் மைய எண் 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார்.இ.கா.ப. உத்தரவின் பேரில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் அறிவழகன் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு.ஈஸ்வரன் மற்றும் காவலர்கள் சகிதம் ரோந்து பணி செய்து கொண்டிருந்த போது காட்டூர் பகுதியில் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து அவர் கையில் வைத்திருந்த பவுச்சை மேற்படி நபரின் அனுமதியுடன் திருவெறும்பூர் வட்டாட்சியர் முன்னிலையில் சோதனை செய்த போது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட Methamphetamine போதை பொருள் சுமார்9 12.86 கிராம் இருந்தது. பின்பு மேற்படி நபரை கைது செய்து போது திருநாவுக்கரசு வயது 34, த/பெ. பழனிசாமி, விசாரித்த போது 9/52, பூச்சக்காடு, மோரூர் மேற்கு, சங்ககிரி, சேலம் மாவட்டம் என்று தெரியவந்தது. அவர் வைத்திருந்த Methamphetamine மற்றும் sterile வாட்டர் சிரஞ்சிகள் எலக்ட்ரானிக் எடை மிஷின் ஆகியவற்றுடன் இரண்டு செல்போன்களையும் கைப்பற்றியும் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.1,02,880/-.
0 Comments