சென்னை – செப் -16,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை
கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில்
இன்று, செப்டம்பர் 16, 2023 சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை கடலோரப் பாதுகாப்புக் குழுமம், மெரினா கடற்கரையில் இருந்து கன்னியாகுமரி வரை அமைப்பட்டிருக்கு 42 கடற்காவல் நிலையங்களில் மொத்தம் மேற்கொள்ளப்பட்டது. 1076 கி.மீ கடற்கரையில் தூய்மைப் பணிகள்
இந்த நிகழ்வில், தமிழ்நாடு காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 450 காவலர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வத் தொண்டர்கள், கடல்சார் தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லுாரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கடலோரத் தூய்மைப் பணியை மாபெரும் இயக்கமாக மேற்கொண்டனர். கடலோரப் பாதுகாப்பு குழுவின் கூடுதல் இயக்குநர் ஜெனரல், கடலோர பாதுகாப்பு குழு, டாக்டர் சந்தீப் மிட்டல், ஐபிஎஸ்.. அவர்களின் வழிகாட்டுதலின் படி, நமது கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்கவும், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
0 Comments