நாகபட்டினம் – செப் -16,2023
newz – webteam
நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட கீரக்கொல்லைத்தெரு, 2-வது சந்தில் வசித்துவந்த . சரோஜா (65), க/பெ. சண்முகசுந்தரம் என்பவர் வீட்டின் படுக்கையில் இறந்து கிடப்பதாக அவரது தங்கை வைரகல்யாணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் 338/2023 ச/பி 174 குவிமுச- வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் புலன்விசாரணையில் மேற்படி இறந்துபோனவரின் வீட்டில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தங்கியிருந்ததாகவும் அவர்களை காணவில்லையென்றும் தெரியவரவே நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று (16.09.23) ம் தேதி தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த காளிதாஸ் (24), த/பெ. கணேசன், உதயடிக்காடு, தம்பிக்கோட்டை மற்றும் அவருடைய அண்ணன் மனைவி வள்ளிமுத்து (27). க/பெ. வீரையன், உதயடிக்காடு, தம்பிக்கோட்டை ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி வள்ளிமுத்துவின் நகைகளை வாங்கி அவரது கணவர் விற்று செலவு செய்துவிட்டதாகவும் அதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதால் அதனை சரிசெய்யும் விதமாக மேற்படி காளிதாஸ் மற்றும் வள்ளிமுத்து ஆகியோர் கடந்த 14.09.2023 ம் தேதி திருப்பூரிலிருந்து நாகப்பட்டினம் வந்து மேற்படி இறந்துபோன சரோஜா வீட்டில் தங்கியதாகவும் மறுநாள் 15.09.2023 ம் தேதி விடியற்காலை சுமார் 03.00 மணியளவில் இறந்துபோன சரோஜாவின் நகைகளுக்கு ஆசைப்பட்டு அவர் தூங்கும்போது இருவரும் தலையணைக்கொண்டு முகத்தில் அழுத்தி சரோஜாவை கொலை செய்ததாகவும் பின்பு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் மூக்குத்தியை கழட்டி கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்பி வேளாங்கண்ணி வந்து தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக இன்று 3 மணியளவில் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர், மேலும் மேற்படி சரோஜாவினை கொலை செய்து அவரிடமிருந்து திருடிச்சென்ற தங்க நகைகள் 4 பவுன் (மதிப்பு ரூபாய் 1,60,000/-) மற்றும் ஒரு செல் போன் Nokia அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
0 Comments