திருச்சி – செப் -16,2023
newz – webteam
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – NOTE
திருச்சி மாவட்டம், இலால்குடி உட்கோட்டம், சமயபுரம் காவல் சரகம் அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த மாதம் ஒரே சமுதாயத்தின் இரு பிரவினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 1) Samayapuram PS, Cr.No. 254/23, U/s 147, 148, 294(b), 324, 427, 307, 506 (ii) IPC r/w 3 of Explosives Substances Act, 2) Samayapuram PS, Cr.No. 255/23, U/s 294(b),324, 307, 506 (ii) IPC (Case in counter), 3) Samayapuram PS, Cr.No. 253/23, U/s 147, 148, 341, 294(b), 324, 506 (ii) IPC r/w 2 of TNPPDL Act ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டும் இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண்ணான 94874-64651 என்ற எண்ணுக்கு கிடைய ரகசிய தகவலின் படி ஜீயபுரம் பகுதியில் உள்ள இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணை செய்து தீனா (எ) தீனதயாளன், வயது 39/23, த/பெ. ராஜகோபால், காந்திநகர், பெருகமணி, ஸ்ரீரங்கம் (பெட்டவாய்த்தலை கா.நி.) என்பவர் மீது 14.09.23 ஆம் தேதி பெட்டவாய்த்தலை காவல்நிலைய குற்ற எண். 116/23 ச/பி 25 (1) (A) of Arms Act r/w 294(b), 506(ii) IPC-இன் படி வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
2) மேற்படி தீனா (எ) தீனதயாளன் என்பவருடன் தொடர்பிலிருந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகிய ஆறு நபர்கள் வாத்தலை பகுதியில் சித்தாம்பூர் என்ற இடத்திலுள்ள சித்தாம்பூர் வெடி கடையில் (வேறு பெயரில் உரிமம் பெற்றது) தெரியவந்துள்ளது அதன் உரிமையாள் முகமது தாசிதீன், வயது 62/23, என்பவரிடம் வெடிபொருட்களை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டுகளாகவும், வெங்காய வெடிகளாகவும் மாற்றி திருச்சி மாவட்டம், திருச்சி மாநகரம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவருகிறது. மேற்படி சித்தாம்பூர் வெடி கடையில் முகமது தாசிதீன் என்பவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வெடி பொருட்களை பெற்று வந்து வாத்தலை பகுதியில் வைத்து விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது.
3) இது தொடர்பாக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். வெடி விற்பனை செய்த சித்தாம்பூர் வெடி கடையை இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்து உரிமம், வெடி மருந்து கையிருப்பு, வெடி மருந்து கடையின் இடத்தின் உரிமையாளர் தொடர்பான விபரங்களை விசாரணை செய்து ஆய்வு செய்தார். மேற்கண்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டு வெடிகுண்டு தொடர்பான தகவல்கள், ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94874-64651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வீ. வருண் குமார், இ.கா.ப., தெரிவித்துள்ளார்
0 Comments