நெல்லை மாநகரம் – செப் – 20,2023
newz – webteam
மேலப்பாளையம் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மாறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி
நெல்லை,மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகள் வெவ்வேறு பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலப்பாளையத்தை சேர்ந்த அர்சத், நிறைமாத கர்ப்பினியான தனது மனைவி பாத்திமாவை (பெயர் மாற்றம் செய்ய ப்பட்டுள்ளது) அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்திருந்தார்.
அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண்ணும் அதே மருத்துவ மனையில் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருவரில் ஒருவருக்கு ஆண் குழந்தையும் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தன. இந்நிலையில்
முதலில் பிறந்த ஆண் குழந்தையை பாத்திமாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்
அவர்களும் தங்கள் குழந்தை என்று எண்ணி தங்களது உறவினர்களிடம் தகவல் சொல்லி உள்ளனர்
இந்நிலையில் ஒரு சிலமணி நேரம் கழித்து நிஷா தனக்கு ஆண் குழந்தை பிறந்தாகதானே சொன்னார்கள்
இப்பொழுது தன் அருகில் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இது பற்றி செவிலியர்களிடம் கேட்டதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்,குழந்தை மாறிவிட்டது என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்
பின்னர் பாத்திமாவின் குடும்பத்தினரிடம் உங்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்துள்ளது.ஆகையால் ஆண் குழந்தையை தாருங்கள் என மருத்துவமனை நிர்வாகம் கேட்க அதிர்ச்சியடைந்த பாத்திமாவின் குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
மேலும் தகவல் அறிந்த பொதுமக்களும் மற்றும் குடும்பத்தினரும் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்
அப்பொழுது காவல்துறையினர் வந்து பாத்திமா குடும்பத்தினரை சமாதானம் படுத்தியுள்ளார்
பிறகு மருத்துவமனை நிர்வாகம் கவன குறைவாக செயல்பட்டதற்க்கு மன்னிப்பு கேட்டனர்.
அதன் பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானமாகி தங்களது குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.
0 Comments