திருநெல்வேலி – செப் -20,2023
newz – webteam
திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – வரும் 24ம் தேதி தொடக்கம்!
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு கோட்டை ரயில்வே மேலாளர் ஆனந்த் தெரிவித்ததாவது;-
“வரும் 24-ம் தேதி 11 மணி அளவில் நாட்டின் 9வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் அழைப்பது குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளவதற்காக வந்துள்ளோம். இதன் அறிக்கை ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும். “ என தெரிவித்தார்.
திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரத்தில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.
இதன்மூலம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments