சென்னை – செப் -20,2023
newz – webteam
நைஜிரியா நாட்டை சேர்ந்த நபர் கடத்தி வந்த 85 கிராம் மெத்தாம்பிட்டமின் என்ற போதை பொருளை கைப்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது..,குற்றம் மற்றும் மதுவிலக்கு கூடுதல் இயக்குனர், மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை 04.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில்நிலையம், வால்டாக்ஸ் ரோடு நுழைவாயில் அருகில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணைகண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, காவல் ஆய்வாளர் ஜெயபாரதி ஆகியோர் போலீஸ் பார்ட்டி சகிதம் சோதனையில் ஈடுபட்டபோது சுமார் 85 கிராம் எடையுள்ள மெத்தாம்பிட்டமின் எனும் போதை பொருளை நைஜிரியா நாட்டை சேர்ந்த Ezebuiloh Sunday @ Chukwu.A/25, S/o. NwaliobaEze, No:15, UMOSUD, ORMA, ELITE, ANAM, NIGERIA என்பவரிடமிருந்து கைப்பற்றி, அவரை கைது செய்தனர். மேற்படி நபர் பெங்களூரிலிருந்து கொண்டுவந்து, சென்னையிலிருப்பவர்களுக்கு போதை பொருட்களை விற்றுவந்துள்ளார். இது தொடர்பாக சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற எண்.24/2023, U/& 8(c) 1/w 22(c) of NDPS Act 1985 ன் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் ரூபாய்.7,00,000/-ஆகும்.
இதற்கு முன்னர் 24-10-2022 ஆம் தேதி நைஜிரியா நாட்டை சேர்ந்த பெண் GuehiJustine.A/31/2022, D/o. Guehi, என்பவரிடமிருந்து சுமார் 56 கிராம் மெத்தகுளைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 20.03.2023 ஆம் தேதி Grant Victor IkennaA/32, S/o.Grant, No:26, aba, Osisioma –Dist, Abia Start – State, Nigeria என்பவரிடமிருந்து 59 கிராம் மெத்தாம்பிட்டமின் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூபாய். 10 லட்சம் ஆகும்.
மேலும் சென்னையில் மேற்படி குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த பலரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இது போன்ற போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களுடன் எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், போதைப்பொருட்கள் கடத்தக் விற்பனை தொடர்பான தகவல்களை 10581 என்ற கட்டணமில்லா தொலையே 94981-10581 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
0 Comments