மதுரை – அக் -01,2023
newz – webteam
மதுரை மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன போக்குவரத்தின் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துகளினால் ஏற்படும் மரணங்களும் கூடிக்கொண்டே செல்கின்றன. இதனை தவிர்க்க காவல்துறையினர் இதர அரசுத்துறையினர்களுடன் இணைந்து பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில் மேலும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக போக்குவரத்து சட்டங்கள், சமிக்ஞைகள், சைகைகள், விதிமுறை மீறல்கள், அதற்குண்டான தண்டனைகள் மற்றும் மதுரை மாநகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள விபத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றினை உள்ளடக்கி போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிக அதிக அளவில் விபத்துக்களை சந்திக்கின்றனர். இவர்களில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக சதவீதம் பேர் இறப்பினை சந்திக்கின்றனர். எனவே பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆகியோர்களுக்கான விழிப்புணர்வு இக்கண்காட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த கண்காட்சியினை மாணவர்களும், பொதுமக்களும் கண்டு அதனை பின்பற்றி விபத்தில்லா சமுதாயத்தினை உருவாக்கிட மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
ads
0 Comments