சென்னை – அக் -11,2023
newz – webteam
கணினிசார் குற்றத்தடுப்பு பிரிவு,
இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்பு துறை (DOT) டிஜிட்டல் பாதுகாப்பைச் செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சார் சாத்தி என்ற இணைய முகப்பை தொடங்கியுள்ளது. இந்த இணைய முகப்பில் Central Equipment Identity Register (CEIR), TAFCOP மற்றும் Know Your Mobile (KYM) போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளன. மேற்படி CEIR என்ற இணைய முகப்பு குடிமக்கள் தங்களுடைய தொலைந்த திருடப்பட்ட கைபேசி சாதனங்களைப் பற்றி புகார் அளிக்க உதவுகிறது. மேலும் இந்த இணைய முகப்பு இந்தியா முழுவதும் தொலைந்த கைபேசி சாதனங்களைக் கண்டறிய பயன்படுகிறது.
தொலைந்த/திருடப்பட்ட (Department of கைபேசிகளை Tele Communication) கண்டறிய தமிழ்நாடு சைபர்கிரைம் பிரிவு, DOT உடன் இணைந்து, மாநிலத்தின் மாவட்டங்கள்/மாநகரங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு CEIR உள் நுழைவு உருவாக்கியுள்ளது. மேலும், CEIR இணைய முகப்பை பயன்படுத்தி திருடப்படட் சாதனத்தின் குறிப்பிட்ட IMEI எண்ணை முடக்க காவல்துறை கோரிக்கை வைக்கிறது. IMEI 24 மணிநேரத்திற்குள் முடக்கப்படும். மேலும், கைப்பேசியினை வேறு எந்த பயனர்களும் மீண்டும் பயன்படுத்த முடியாது. முடக்கப்பட்ட IMEI எண்ணில் ஏதேனும் சிம் இயக்கப்பட்டதும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் பட்டியல் (BL) பற்றிய அறிவிப்பைப் பெறுவார். தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களை மீட்டெடுக்க, கடைசியாக செயல்படுத்தப்பட்ட விபரங்களின் இருப்பிடம் மற்றும் கைபேசி எண் ஆகியவை தொலைத்தொடர்பு வழங்குநர்களால் காவல்துறைக்கு பகிரப்படுகிறது. அனைத்து ID- யை
எனவே, மக்கள் https://ceri.sancharsaathi.gov.in/Home/index.jsp என்ற link-ஐ பயன்படுத்தலாம். குடிமக்கள் காணமல் போன கைபேசி பற்றிய தகவல்களுடன், தொலைந்த திருடப்பட்ட கைபேசிகளை மீட்டெக்க அந்தந்த காவல் நிலையங்களை அணுகலாம். கைப்பேசி மீட்டெடுக்கப்பட்டதும் முடக்கப்பட்ட IMEI எண்மீதுள்ள தடையை நீக்க கோரலாம்.
கூடுதலாக 14422 என்ற எண்ணுக்கு KYM என குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் கைபேசியின் IMEI எண் குறித்த உண்மைத்தன்மையையும் அறிந்து கொள்ளமுடியும். அக்கோரிக்கைக்கு பயனர் IMEI-யின் நிலையுடன் கைபேசியின் பிராண்ட் பெயர், மாடல்பெயர், உற்பத்தியாளர் மற்றும் சாதன வகைக்கான விபரங்களைப் பெறுகிறார்.
TAFCOP தளமான https://tafcop.sancharsaathi.gov.in./telecomuser/-யில் தங்கள் எண்ணை கொண்டு உள்நுழைந்தால், அவர்கள் பெயரில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை மக்கள் பெறமுடியும். இதன் மூலம் தங்களின் பெயரில் போலியாக பெறப்படும் சிம்கார்டுகளை மக்கள் கண்டறிந்து முடக்கலாம்.
கைபேசி மற்றும் போலி சிம்கார்டுகளை முடக்குவதன் மூலம் மக்கள் தங்களது விபரங்களை போலியாக பயன்படுத்தி பிறர் எந்த ஒரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதை தடுக்க முடியும்.
0 Comments