ஆழ்வார்திருநகரி அருகே கஞ்சா விற்‌‌‌றவர்‌‌‌ கைது கஞ்சா, பைக் ரொக்‌‌‌கபணம்‌‌‌ பறிமுதல்


தூத்துக்குடி – அக் – 16,2023

newz – webteam

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்‌‌‌ கைது – 350 கிராம் கஞ்சா, ரொக்கபணம் ரூபாய் 1,650/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி மறவன்மடம், ஜெபஆசீர் நகரைச் சேர்ந்த சோமு மகன் கந்தையா (எ) கந்தசாமி (39) என்பதும் அவர் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி கந்தையா (எ) கந்தசாமியை கைது செய்து அவரிடமிருந்த 350 கிராம் கஞ்சா, ரொக்கபணம் ரூபாய் 1,650/- மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format